கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்

காணொளிக் குறிப்பு, கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்
கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் புனித ஜார்ஜ் கோட்டையில் கொடி ஏற்றினார். அதன் பின்னர் உரையாற்றிய விஜய் "லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவது கூட விடுதலைக்குச் சமமானது தான். தமிழ்நாட்டை ஒரு வெளிப்படையான, உண்மையான மற்றும் நேர்மையான நிர்வாகமாக செயல்பட்டு வருகிறோம். மக்கள் நலன் தான் முக்கியமானது

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் நாம் மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்புடன் இருக்கிறோம். அதே நேரம் தமிழ்நாட்டின் கொள்கைகள் என வருகிறபோது மாநில உரிமைகள், தமிழ்நாடு கொள்கைகளுக்கு எதிரான முடிவுகளை தவெக அரசு எதிர்க்கும்.

முந்தைய அரசுகள் கொண்டு வந்ததில் மக்களுக்குப் பயனுள்ள திட்டங்கள் என்னென்ன இருக்கிறதோ அவற்றைத் தொடர்கிறோம்." என்று தெரிவித்தார்.

தவெக அரசு கடந்த மூன்று மாதங்கள் நிறைவேற்றிய திட்டங்களைப் பட்டியலிட்டுப் பேசினார் விஜய். அதோடு சில புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு