You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஹோர்முஸ் நீரிணையில் இரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்
வணிக கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தொடர் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இரானில் உள்ள பல இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. தாக்குதல் காணொளி என ஒரு காணொளியையும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இரு தரப்புமே மாறிமாறி குற்றம்சாட்டி உள்ளன.
அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள பதிவில், பனாமாவில் பதிவு செய்யப்பட்ட 'எம்டி கிகு' என்ற டேங்கர் கப்பலை தாக்க இரான் ட்ரோனை ஏவிய சமயத்தில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதிப்பதற்கான வாய்ப்பு இருந்தும் இரான் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை என கூறி உள்ளது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு