You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தராகண்ட் சுரங்க விபத்து: எலி வளை சுரங்க முறையில் பணியாளர்களை மீட்டவர்கள் சொன்னது என்ன? – காணொளி
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு, அதனுள் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கியிருந்தனர்.
17 நாட்கள் போராடி அவர்கள் மீட்கப்பட்டனர். இயந்திரம் மூலம் இடிபாடுகளைத் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு, தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி நடந்தது.
24 மணிநேரம் நீடித்த அநத பணியில் 24 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதில் ஈடுபட்ட பணியாளர்கள் கைக்கருவிகளைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றிச் சுரங்கப்பாதையை உருவாக்கினார்கள்.
வழியில் இரும்புக் கம்பிகள் போன்ற தடைகள் இருந்தால் லேசர் இயந்திரம் அல்லது பிளாஸ்மா இயந்திரங்களக் கொண்டு அவற்றை வெட்டி அவற்றை அகற்றினார்கள்.
அவர்கள் இரண்டு மீட்டர் வரை மண்ணை அகற்றியதும் பின்னால் இருந்து ஆகர் இயந்திரம் மூலம் ஒரு குழாய் உள்ளே தள்ளப்பட்டது.
எலிவளைச் சுரங்க முறை நிலக்கரிச் சுரங்கங்களில் பயன்படுத்தப் படும் முறையாகும். இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் மண்வெட்டிகளை உபயோகப்படுத்தி கரியை வெட்டி, கூடைகளில் அதைச் சேகரிப்பர்.
இதன்மூலம் ஒரு நபர் மட்டுமே ஊர்ந்து செல்லக்கூடிய அளவுக்கான ஒரு துளையை உருவாக்கினார்கள். இது தொழில்நுட்பப் பூர்வமான முறையல்ல, பாதுகாப்பானதும் அல்ல, ஆனால் இந்த இடத்தில் அதுதான் 41 தொழிலுளர்களையும் பத்திரமாக மீட்டு வர உதவியிருக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)