வெள்ளத்தால் நிலைகுலைந்த நியூசிலாந்து - தத்தளிக்கும் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
நியூசிலாந்தில் சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், அந்நாட்டின் பெரிய நகராக அறியப்படும் ஆக்லாந்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக ஆக்லாந்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்துள்ளது.
கோடை காலத்தில் பெய்யும் மொத்த மழை அளவில் 75 சதவீதம் அளவிலான மழை 15 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் அந்நகரில் அவசரகால நடவடிக்கைகளுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













