You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சண்டையை நிறுத்த டிரம்ப் கெஞ்சினாரா? - இரவு முதல் நடந்தது என்ன?
இரானும் இஸ்ரேலும் முழுமையான சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், சண்டை நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதுக்குப் பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது இரான் தாக்குதல் நடத்தியது.
எனினும் இந்த தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது இரானின் வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது 'சண்டை நிறுத்தம்' திணிக்கப்பட்டுள்ளது என இரானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் சண்டை நிறுத்ததுக்கு 'கெஞ்சினார்' எனவும் இரான் அரசு ஊடகம் கூறியுள்ளது.
அதேபோல, இஸ்ரேல் இந்த சண்டை நிறுத்ததுக்கு ஒப்புதல் தெரிவித்த போதிலும், எந்தவொரு சண்டை நிறுத்த மீறலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு