காணொளி: டிரம்ப் இறந்துவிட்டதாக பரவிய வதந்தி - டிரம்பிடமே கேட்டு தெரிந்துகொண்ட செய்தியாளர்

காணொளி: டிரம்ப் இறந்துவிட்டதாக பரவிய வதந்தி - டிரம்பிடமே கேட்டு தெரிந்துகொண்ட செய்தியாளர்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் டிரம்ப் இறந்துவிட்டதாக பரவிய வதந்தி குறித்து அவரிடமே செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

கடந்த வார இறுதியில் நீங்கள் இறந்துவிட்டீர்கள் என ஒரு சமூக ஊடக டிரெண்ட் வைரலானது. அதை பற்றி எப்படி தெரிந்துகொண்டீர்கள்? அதை பார்த்தீர்களா என டிரம்பிடம் செய்தியாளர் கேட்டார்.

இதற்கு டிரம்ப் 'இல்லை' என பதில் அளித்தார்.

பின் செய்தியாளர் "இரண்டு நாட்களுக்கு உங்களை எங்கேயும் பார்க்க முடியவில்லை. உங்கள் "இறப்பு செய்தி" பற்றி சனிக்கிழமை காலை வரைக்கும் 1.3 மில்லியன் பயனாளர்கள் பேசியுள்ளனர்" என்றார்

இதைக் கேட்டதும் டிரம்ப், "அப்படியா? நான் அதை பார்க்கவில்லை. நான் கேள்விப்பட்டேன். நகைச்சுவையாக உள்ளது. கடந்த வாரம் நான் பல செய்தியாளர் சந்திப்புகளில் பங்கேற்றேன். அவை நன்றாக சென்றன. இப்போது, நடக்கிறதே இது போல. அதன் பிறகு இரு நாட்களுக்கு எதுவும் செய்யாமல் இருந்தேன். உடனே எனக்கு ஏதோ பிரச்னை என கூறிவிட்டார்கள். பைடன் மாதக்கணக்கில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார். அப்போதெல்லாம் அவருக்கு ஏதோ பிரச்னை என யாரும் கூறவில்லை. அவர் நல்ல உடல்நிலையில் இல்லை என்றும் நமக்கு தெரியும்." என பதில் அளித்தார்.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.