You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்ட ஹமாஸ்- டிரம்ப் கூறியது என்ன?
காஸாவில் அமைதிக்காக அமெரிக்கா முன்மொழிந்த திட்டத்தை பகுதியளவு ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்வினையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “இந்த முயற்சியில் உதவிய நாடுகளுக்கு நன்றி. கத்தார், துருக்கி, சௌதி அரேபியா, எகிப்து, ஜோர்டான் மற்றும் பல நாடுகள். பலர் இதற்காக கடுமையாக போராடினர். இது மிக முக்கியமான நாள். இது எவ்வாறு முடிகிறது என பார்ப்போம். இறுதியான மற்றும் உறுதியான முடிவைப் பெற வேண்டும். முக்கியமாக, பணயக்கைதிகள் வீடு திரும்பி பெற்றோருடன் சேர்வதை எதிர்நோக்குகிறேன்.” என்று கூறினார்.
மேலும், “துரதிர்ஷ்டவசமாக சில பணயக்கைதிகள், அவர்களின் நிலைமை என்ன என உங்களுக்கு தெரியும், அவர்களும் தங்கள் பெற்றோரிடம் திரும்புவார்கள். ஏனெனில் அந்த இளம் பெண்கள், ஆண்கள் உயிருடன் இருக்க வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினர்.”
“இது மிக சிறப்பான நாள். பல வகைகளில் இதற்கு முன்னால் நடந்திராத ஒன்று. முன்னெப்போதும் இல்லாதது. அனைவருக்கும் நன்றி. உதவிய நாடுகளுக்கும் நன்றி. நாம் நிறைய உதவிகளை பெற்றோம். இந்தப் போர் முடிந்து, மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் அனைவரும் ஒரே கருத்துடன் இருந்தனர். அதனை அடைவதில் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். நன்றி. அனைவரும் நியாயமாக நடத்தப்படுவார்கள்.” என்றும் டிரம்ப் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு