You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாற்றுத்திறனாளிகளுக்காக ‘மிதக்கும் சக்கர நாற்காலி’ திட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்கள்
தென்கொரியாவின் பள்ளி மாணவர்கள் சிலர் மாற்றுத்திறனாளிகள் எளிதாக கடற்கரையைப் பயன்படுத்த ‘மிதக்கும் சக்கர நாற்காலி’ திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
“கடற்கரை ஒரு பொது இடம், எனவே இங்கு சிலர் மட்டுமல்லாமல் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். சில காரணங்களால், கடற்கரைக்கு மாற்றுத்திறனாளிகளால் எளிதாக செல்ல முடியவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருந்தது. அதனால் இதைச் செய்தோம்” என்கிறார் மாணவர்களில் ஒருவரான ஈஒம் ஜூஹ்யூன்.
மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த சிறப்பு சக்கர நாற்காலி மணலில் நன்றாகச் செல்லும். காரணம், அதன் தடினமான ரப்பர் சக்கரங்கள். அதிலுள்ள டியூப்களால் தண்ணீரில் இது மிதக்கவும் செய்கிறது.
முழு விவரம் காணொளியில்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)