டெல்லியில் கனமழை - வெள்ளக்காடாக மாறிய சாலைகள்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகரான டெல்லியில் கனமழை பெய்து வருகிறது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான டெல்லி ஐடிஓ, பிகாஜி காமா, விஜய் சவுக் பகுதிகளில் காலையில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளநீர் பாய்ந்தோடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
டெல்லியில் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மின்டோ சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்று நீரில் மூழ்கியது.
முழு விவரம் காணொளியில்...

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)
















