கரூரில் 40 பேர் பலி: கூட்ட நெரிசலுக்கு பிறகு என்ன நடந்தது? நிழலாக உறைந்த நிஜங்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மகனை இழந்த தாய் கதறி அழும் காட்சி
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தவெக சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தவர்களை அழைத்துச் சென்ற ஆம்புலன்சை சூழ்ந்துள்ள கூட்டம்
படக்குறிப்பு, நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தவர்கள் அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட காட்சி.
படக்குறிப்பு, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் ரவி என்கிற கட்டடப் பொறியாளரும் ஒருவர். இன்று அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்ததாக அவரின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
படக்குறிப்பு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கரூர் அரசு மருத்துவமனைக்கு வெளியே கூடிய நிலையில் சிலர் துக்கம் தாளாமல் அழுதனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கூட்ட நெரிசலில் சிக்கிய பலரது உடைமைகள் சிதறிக் கிடக்கும் காட்சி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. அப்போது குடும்பத்தினர் கண்ணீர் மல்க உடலைப் பெற்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கூட்ட நெரிசலில் தனது உறவுகளை இழந்த குடும்பத்தினர் துக்கம் தாங்க முடியாமல் உடைந்து அழுதனர்.
படக்குறிப்பு, கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் காலணிகள் பரவிக் கிடக்கின்றன.
படக்குறிப்பு, கரூர் வேலுசாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியின் தற்போதைய கழுகுப் பார்வை காட்சி. போக்குவரத்து இயல்பாக இருக்கும் நிலையில் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் உள்ளனர். பொதுக் கூட்டத்திற்கு வந்தவர்கள் விட்டுச் சென்ற காலணிகள் சாலை முழுவதும் பரவி கிடக்கிறது.