You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆமதாபாத்: கடும் வெயிலிலும் உழைக்கும் பெண்களுக்கு 'ஹீட் இன்சூரன்ஸ்' - காணொளி
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த வெயிலால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவது பெண்கள் தான். குறிப்பாக மாதம் 5000 முதல் 6000 ரூபாய் வரை மிகக் குறைவான வருமானம் பெறும் பெண்கள்.
கடும் வெப்ப அலையால் பாதிக்கப்படும் பெண்களுக்காக 'ஹீட் இன்சூரன்ஸ்' (Heat Insurance) எனப்படும் சிறப்பு காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
"வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டேன், தோலில் வெடிப்புகள் ஏற்பட்டன. இன்சூரன்ஸ் பணமாக கிடைத்த 1168 ரூபாயில் உணவு மற்றும் மருந்துகளை வாங்கினேன்." என்று கூறுகிறார் ஹன்சா. தினமும் நகரத்தின் குப்பைகளை சேகரிப்பது தான் ஹன்சாவின் அன்றாட பணி.
ஆமதாபாத்தில் 44 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெயில் இருந்தால், காப்பீடு பெற்றவர்களுக்கு ஒரு நாளைக்கு 333 ரூபாய் வழங்கப்படும். வீட்டிற்குள் வேலை செய்பவர்களுக்கும் வெப்ப அலை முக்கிய பிரச்னை தான். பட்டம் தயாரிக்கும் ஷேக் சபேராவால் வீட்டிற்குள் மின்விசிறியைப் பயன்படுத்த முடியாது. தாங்க முடியாத வெப்பம் அவரது தொழிலை பாதிக்கிறது.
"ஒரு பட்டத்திற்கு 2 ரூபாய் 50 பைசா கிடைக்கும். ஆனால் இந்த மாதத்தில் குறைவான பட்டங்களை மட்டுமே தயாரிக்க முடிந்தது. ஹீட் இன்சூரன்ஸ் மூலம் கிடைத்த பணத்தால் என் மகளின் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடிந்தது." என்கிறார் ஷேக் சபேரா.
இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் 46,000 பெண்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும் விவரம் காணொளியில்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)