திருமண முறிவு குறித்து இன்ஸ்டாவில் அறிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

காணொளிக் குறிப்பு, கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவி சோஃபியும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்துள்ளனர்.
பிரசுரிக்கப்பட்டது

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவி சோஃபியும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்துள்ளனர். கடினமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் அறிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் "ஆழ்ந்த அன்பும் மரியாதையும் கொண்ட நெருக்கமான குடும்பமாக" இருப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

2005-ஆம் ஆண்டு மாண்ட்ரீல் நகரில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவி சோஃபியும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திருமணம் முறிந்தாலும் அடுத்த வாரம் குடும்பமாக விடுமுறையை கழிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

திருமண முறிவு ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டிருந்தாலும், இருவரும் இணைந்து பொதுவெளியில் தோன்றுவார்கள் என்று ஜஸ்டின் ட்ரூடோவின் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"அவர்கள் திருமண முறிவு தொடர்பான அனைத்து சட்ட மற்றும் நெறிமுறை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய அவர்கள் முயன்றிருக்கிறார்கள். தொடர்ந்து அடுத்த கட்டத்துக்கு நகர்வார்கள்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அவர்கள் குடும்பமாக விடுமுறையைக் கழிப்பார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: