இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் கொடுத்துள்ள அழுத்தம் என்ன? முழு பின்னணி
கடந்த 7 மாதங்களாக பாலத்தீனம் - இஸ்ரேல் இடையில் கடும் மோதல் நிலவி வருகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் மோதலில் தனது படைகளை பயன்படுத்தி அடுத்தடுத்த நகரங்களை கைப்பற்றி வருகிறது இஸ்ரேல். தற்போது ரஃபா மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் தெற்கு காஸாவில் உள்ள ரஃபாவின் மீதான ராணுவ தாக்குதல்களை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஸா விவகாரத்தில் இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றம் அழுத்தம் கொடுத்திருப்பது இதுவே முதல் முறை.
காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பாக தென்ஆப்பிரிக்கா தொடர்ந்த இனப்படுகொலை வழக்கில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை ஹமாஸ் வரவேற்றுள்ளது.
ஆனால் இஸ்ரேலோ, உலகில் எந்த ஒரு சக்தியாலும் தங்களை தடுத்து நிறுத்த முடியாது என இஸ்ரேல் எதிர்வினையாற்றியுள்ளது. மேலும், இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே ரஃபா நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள முகாம் ஒன்றின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
முழு விவரங்களை காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



