You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெற்ற குழந்தைகளின் சடலத்தை சுமந்து சென்ற பெற்றோர் - ஆம்புலன்ஸ் எங்கே போனது?
மகாராஷ்டிரா மாநிலம் கட்ச்சிரோலி பகுதியை சேர்ந்த தம்பதியினர், ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் தங்களின் குழந்தைகளின் சடலங்களை சுமந்து சென்ற காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் குழந்தைகளின் சடலத்தை 15 கிலோமீட்டர் தூக்கிச் சென்றுள்ளனர் அந்த பெற்றோர்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சாமியார் ஒருவரிடம் அழைத்துச் சென்று அங்கே அவர்களுக்கு மூலிகை மருந்து வாங்கிக் கொடுத்துள்ளனர்.
ஆனால் உடல் நலத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் செப்டம்பர் 4-ஆம் தேதியன்று அந்த குழந்தைகளை ஜிமல்கட்டா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் ஏற்கனவே அந்த குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ் கிடைக்காத காரணத்தால் அவர்கள் தங்களின் குழந்தைகள் சடலத்தை சுமந்து கொண்டே அவர்களின் கிராமத்திற்கு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் இதில் விரைவாக செயல்பட்டு, அந்த சாமியாரை விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அங்கே குரல் கொடுத்து வருகின்றனர்.
- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)