காணொளி: குஜராத் மக்கள் ராவணனிடம் அடிவாங்குவது ஏன்?

காணொளி: குஜராத் மக்கள் ராவணனிடம் அடிவாங்குவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தில் ராவணன் ஓர் வேடமிட்ட ஒருவர் கிராம மக்களை ஓட ஓட கம்பால் அடிக்கும் காட்சி இது.

இது குஜராத்தில் தசரா பண்டிகையின்போது செய்யப்படும் ஒரு சடங்கு.

72 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரியத்தின் படி, கிராமத்தில் ஒருவரே ராவணனாக மாறி, மக்களை கம்பால் அடிக்கிறார்.

சுரேந்திரநகர் மாவட்டத்தில் இந்த சடங்கு நடக்கிறது.

இந்தக் கம்பு மேலே பட்டால் நோய்கள் விலகும் என கிராம மக்கள் நம்புகிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன், இந்த கிராமத்தில் பிளேக் நோய் பரவியது. அதன் பிறகு இந்த பாரம்பரியம் தொடங்கப்பட்டது, இது இன்றும் தொடர்கிறது. தவில், நகாரா போன்ற இசைக்கருவிகளுடன், ராவணனாக வேடமணிந்தவர் கிராமம் முழுவதும் சுற்றி மக்களை துரத்தி துரத்தி அடிக்கிறார். இந்த விசித்திரமான பாரம்பரியத்தை காண முழு கிராமமும் கூடுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு