மாடு மீது அமர்ந்து அரசு அலுவலகம் சென்ற விவசாயி - ஏன்?

மாடு மீது அமர்ந்து அரசு அலுவலகம் சென்ற விவசாயி - ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிராவில் உள்ள சந்திரபூர் என்ற பகுதியில், கடனை தள்ளுபடி செய்யக் கோரி விவசாயி ஒருவர் மாடு மீது அமர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டம் ராஜுராவில் நடந்துள்ளது.

மாநில அரசு கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்த போதிலும், விவசாயிகளுக்கு அதன் பலன் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்று அவர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

மேலும், காளையின் மீது அமர்ந்து கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பியவாறு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தை சுற்றினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு