பசிபிக் பெருங்கடலில் காணாமல் போன இவர் 95 நாட்கள் உயிர் பிழைத்திருந்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, காணாமல் போன மீனவர்
பசிபிக் பெருங்கடலில் காணாமல் போன இவர் 95 நாட்கள் உயிர் பிழைத்திருந்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

பசிபிக் பெருங்கடலில் காணாமல் போன மீனவர் ஒருவர் 95 நாட்களுக்குப் பிறகு தனது சகோதரருடன் இணைந்துள்ளார்.

61 வயதான மேக்சிமோ நபா கடந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி இரண்டு வார மீன்பிடிப் பயணத்திற்காக பெருவில் உள்ள மார்கோனாவிலிருந்து புறப்பட்டார். ஆனால், புயல் இவரை திசை திருப்பியது. மழைநீரை பிடித்து, கையில் கிடைத்ததை சாப்பிட்டு இவர் உயிர் பிழைத்தார். ஈக்வடாரின் ஒரு ரோந்து படகு கடற்கரையிலிருந்து 1094 கிமீ தொலைவில் இவரை கண்டுபிடித்தது.

அவர் தனது சகோதரருடன் இணைந்த நெகிழ்வான தருணம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.