You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாராஷ்டிராவை கலக்கும் பழங்குடியின பெண் ராப் பாடகர் - மூன்றே பாட்டில் பிரபலம்
மதுரா காணே’ மஹி ஜி’ என்ற பெயரில் தனது ராப் இசையால் பிரபலமானவர்.
மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் மதுரா காணே. மஹி ஜி என்பது இவரது புனைப் பெயர். இவரது பாடல்கள் சமூக வலைத்தளங்களில் மிக குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தது மட்டுமின்றி தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்.
"புறக்கணிக்கப்படும் அல்லது மைய நீரோட்டத்திலிருந்து விலக்கப்படும் பிரச்னைகளையே எனது பாடல்கள் மூலம் பெரும்பாலும் பேச முயற்சிக்கிறேன்" என்கிறார் அவர்.
இவரின் இரண்டாவது பாடலான ஜங்கல்சா ராஜாவுக்கு (காட்டு ராஜா) பிறகே, ராப் பாடகராக அவரது பயணம் இன்னும் வேகமெடுக்க தொடங்கியது. இந்த பாடல் வழியாக பழங்குடியினர் மீதான அடக்குமுறைக்கு எதிராக அவர் குரல் எழுப்பியிருந்தார். இது பெரும் வெற்றி பெற, பாலிவுட் பிரபலங்களான விஷால் தத்லானி, பாட்ஷா ஆகியோர் இந்த பாடலை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டினர்.
முழு விவரங்களை இந்த காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)