You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாயேஜர் 2: பலநூறு கோடி கி.மீ.க்கு அப்பால் இழந்த விண்கலத்தின் தொடர்பை நாசா மீட்டது எப்படி?
- எழுதியவர், மேகன் பிஷர்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
எதிர்பார்த்ததை விட இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே துண்டிக்கப்பட்ட வாயேஜர் 2 விண்கலத்துடனான தொடர்பு மீண்டும் முழு தொடர்பில் உள்ளது என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1977 இல் விண்வெளியை ஆராய அனுப்பப்பட்ட விண்கலத்திற்கு ஜூலை மாதம் தவறான கட்டளை வழங்கப்பட்டதால், அதன் நிலை மாறி பூமியுடனான தொடர்பை துண்டித்தது.
செவ்வாயன்று ஒரு சிக்னல் கிடைத்தது. "இன்டர்ஸ்டெல்லர் ஸ்க்ரீம் " என்ற சக்திவாய்ந்த அறிவுறுத்தலின்படி, அதன் ஆண்டெனா இப்போது பூமியை எதிர்கொள்கிறது.
நாசா, முதலில் விண்கலம் அக்டோபரில் தான் தொடர்பு கொள்ள முடியும் என நம்பியிருந்தது.
வாயேஜர் 2 பூமியிலிருந்து பில்லியன் கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், கட்டளை வேலை செய்ததா என்பதைக் கண்டறிய மிஷன் கன்ட்ரோலர்களுக்கு 37 மணிநேரம் ஆனது.
விண்கலத்திற்கு ஒரு செய்தியை அனுப்ப பணியாளர்கள் "உயர்ந்த ஆற்றல் டிரான்ஸ்மிட்டரை" பயன்படுத்தினார்கள். அதன் "சிறந்த சூழலில்"அனுப்ப திட்டமிடப்பட்டது. அதனால் ஆண்டெனா கட்டளையுடன் சீரமைக்கப்படும் என்று விண்கலத்தின் இயக்குனர் சுசான் டாட், வாயேஜர் திட்டம், ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
தகவல்தொடர்புகள் துண்டிக்கப்பட்ட பிறகு, உலகம் முழுவதும் காணப்படும் மாபெரும் ரேடியோ ஆண்டெனாக்களின் தொடர்புகள், நாசாவின் நெட்வொர்க்கிற்கு கட்டளைகளைப் பெறவோ அல்லது தரவை அனுப்பவோ முடியவில்லை.
ஆனால் விண்கலத்தில் இருந்து தரவுகள் பெறப்பட்டதாகவும் அது சாதாரணமாக இயங்குவதாகவும் ஆகஸ்டு 4ஆம் தேதி விண்வெளி நிறுவனம் உறுதி செய்தது.
அறிவியல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ள விண்கலம் பிரபஞ்சத்தில் அதன் திட்டமிட்ட பாதையில் இருக்கும் என்று நாசா எதிர்பார்க்கிறது.
இதயத்துடிப்பு கண்டுபிடிப்பு
வாயேஜர் 2 விண்கலத்துடனான தொடர்பை பூமியிலிருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் இழந்த பின்னர், இப்போது அதனிடமிருந்து ஒரு ‘இதயத்துடிப்பு’ சமிக்ஞையைப் பெற்றுள்ளதாக திங்களன்று நாசா தெரிவித்திருந்தது.
திங்களன்று வானத்தை வழக்கம்போல ஸ்கேன் செய்தபோது வாயேஜர் 2-லிருந்து ஒரு சமிக்ஞை பெறப்பட்டதாக நாசா கூறியது.
திங்களன்று முழுமையான தகவல்தொடர்பு நிறுவப்படவில்லை என்றாலும், வாயேஜர் 2 ஒவ்வொரு ஆண்டும் பல முறை தன் அதன் ஆன்டெனாவை மீண்டும் பூமியை நோக்கித் திருப்பும் வகையில், ‘ரீசெட்’ செய்யக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் அடுத்த ‘ரீசெட்’ அக்டோபர் 15 அன்று நடைபெற உள்ளது. இது விண்கலத்துடனான தொடர்புகளை மீண்டும் நிறுவும்,’ என நாசா நம்பிக்கை தெரிவித்திருந்தது.
வாயேஜர் 2 மற்றும் அதன் இரட்டையான வாயேஜர் 1 ஆகியவை சூரியனால் உருவாக்கப்பட்ட துகள்கள் மற்றும் காந்தப்புலங்களின் பாதுகாப்பு குமிழியான ஹீலியோஸ்பியருக்கு வெளியே இயங்கும் இரண்டே விண்கலங்கள் ஆகும். அவை முறையே 2018 மற்றும் 2012-ல் விண்மீன்களுக்கு இடையே உள்ள வெளியை அடைந்தன
176 வருடங்களுக்கு ஒரு முறை வெளிப்புறக் கோள்களான வியாழன் மற்றும் சனியை ஒரே நேர்க்கோட்டில் வரும். அந்த அரிய நிகழ்வைப் பயன்படுத்தி அக்கோள்களை ஆய்வு செய்யும் வகையில் இந்த விண்கலங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நெப்டியூன் மற்றும் யுரேனஸ் மூலம் பறந்த ஒரே விண்கலம் வாயேஜர் 2 ஆகும், வாயேஜர் 1 இப்போது பூமியிலிருந்து கிட்டத்தட்ட 25 பில்லியன் கிமீ தொலைவில் உள்ளதால், அது மனிதகுலத்திற்கு மிக தொலைதூர விண்கலமாகும்.
2025க்கு பிறகு இரண்டு விண்கலங்களின் சக்தி தீர்ந்துவிட்ட பிறகும், அவை தொடர்ந்து விண்வெளியில் சுற்றித் திரியும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்