BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.
நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் இந்த வாரம், இலங்கையில் பொருளாதாரம் எப்போது இயல்புக்கு திரும்பும்?, மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி? தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தால் மீண்டும் ஏற்பட்ட சர்ச்சை, நினைவாற்றலை அதிகரிக்க உதவும் உணவுகள் எவை? ஒரே ஓவரில் 7 சிக்சர்களை விளாசிய ருத்துராஜ் கெய்க்வாட் என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
இலங்கையில் பொருளாதாரம் எப்போது இயல்புக்கு திரும்பும்? மத்திய வங்கி ஆளுநர் என்ன சொல்கிறார்?
இலங்கையின் பொருளாதாரம் 2023ஆம் ஆண்டு வழமைக்கு திரும்பும் என நம்புவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.அதிகரித்து சென்ற பணவீக்கமானது, தற்போது 70 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். இது குறித்து விரிவாக அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி? - முக்கிய தகவல்கள்
தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான தேதி டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சாரத் துறைஅமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.மின் இணைப்பு பெற்றுள்ள 2.33 கோடி நுகர்வோரில் இதுவரை சுமார் 15 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி என்பதை இந்த லிங்கை க்ளிக் செய்து அறியலாம்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் 'அருவருக்கத்தக்க' படம் என்ற இஸ்ரேலிய இயக்குநர் – மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் தூதர்

பட மூலாதாரம், The Kashmir Files
தி காஷ்மீர் ஃபைல்ஸ் இந்தி திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 'பனோரமா' பிரிவில் திரையிடப்பட்டது குறித்து அதன் விருது தேர்வுக்குழுத் தலைவர் நடாவ் லபிட் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. என்ன பேசினார் அவர்? விரிவாக படிக்க லிங்கை க்ளிக் செய்யவும்.
நினைவாற்றலை அதிகரிக்க உதவும் உணவுகள் எவை? எந்த உணவுப்பழக்கம் நல்லது?
காலை உணவுடன் கூடுதல் பழம், இரவு உணவில் கூடுதல் காய்கறிகள் என நமது உணவுப் பழக்கங்களை மிகவும் சத்தான திசையில் கொண்டு செல்ல சிறிய நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்றைய நமது நினைவுகளை மேம்படுத்தவும் எதிர்காலத்திற்காக அவற்றைப் பாதுகாக்கவும் உதவும் என்று ஆய்வுகள் அறிவுறுத்துகின்றன. லிங்கை க்ளிக் செய்து முழுமையாக வாசியுங்கள்.
ருதுராஜ் கெய்க்வாட்: ஒரே ஓவரில் 7 சிக்சர்களை விளாசியவர் - “தல” தோனியிடம் இவர் கற்றுக் கொண்டது என்ன?

பட மூலாதாரம், Getty Images
விஜய் ஹசாரே கோப்பையின் காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து ஏழு சிக்சர்களை அடித்து லிஸ்ட்-ஏ கிரிக்கெட் சாதனை படைத்துள்ளார். மேலும் படிக்க லிங்கை க்ளிக் செய்யவும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












