''என் சைக்கிள் பலர் உயிரைக் காப்பாற்றியது'' - சைக்கிள் மருத்துவரின் கதை

''என் சைக்கிள் பலர் உயிரைக் காப்பாற்றியது'' - சைக்கிள் மருத்துவரின் கதை
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையைச் சேர்ந்த மருத்துவரான கனகரத்தினம் காண்டீபன், மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்று சிகிச்சையளித்து வருகிறார். பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவிய போது பலர் சைக்கிளுக்கு மாறிய நிலையில், அதில் கனகரத்தினம் காண்டீபனும் ஒருவர்.

அந்தக் காலகட்டத்தில் தினமும் 30கிமீவரை சைக்கிளில் சென்று சிகிச்சையளித்த இவர், தன்னுடைய சைக்கிள் பலரது உயிரைக் காப்பாற்றியதாகக் கூறுகிறார். தற்போது சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் கனகரத்தினம், பள்ளி மாணவர்களிடையே சைக்கிள் ஓட்டுவதையும் ஊக்குவிக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: