மரபுகளை உடைக்கும் ரஷ்ய பியானோ கலைஞர்கள்

மரபுகளை உடைக்கும் ரஷ்ய பியானோ கலைஞர்கள்
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு பியானோ கலைஞர்கள், நான்கு கைகளை வைத்து பியானோ வாசிக்கும் செவ்வியல் முறைக்கு மீண்டும் உயிரூட்டி இருக்கின்றனர்.

ரஷ்ய இசைப்பள்ளியில் நிலவும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகவும், பழமையான மரபுகள் காரணமாகவும் இந்த இருவரும் லண்டனுக்கு வந்தனர்.

ரஷ்ய இசைச் சமூகத்தில் நிலவும் மரபுகளால் தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்களின் பாலியல் விருப்பங்களை மறைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்ற வேண்டியுள்ளதாக இவர்கள் கூறுகின்றனர்.

கோவிட் தொற்று காலத்தின் போது ஒரு சிறிய வீட்டில் இருக்கவேண்டிய நிர்பந்தத்தால், ஒரு பியானோவில் இருவரும் பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளனர்.

அதை வைத்து, நான்கு கைகள் கொண்டு பியானோவை இசைக்கும் பழமையான முறைக்கு இவ்விருவரும் மீண்டும் உயிரூட்டி உள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)