'தமிழ்நாடுக்கு பதில் தமிழகமே சரி' - ஆளுநர் ரவி பேச்சு சர்ச்சையானது ஏன்?

'தமிழ்நாடுக்கு பதில் தமிழகமே சரி' - ஆளுநர் ரவி பேச்சு சர்ச்சையானது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

"தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும், ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி" என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் தெரிவித்த கருத்து பெரும் சர்சையாகியுள்ளது.

75-ஆவது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் வகையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில்தான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தக் கருத்தை தெரிவித்திருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: