You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் மீது பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; இரானின் அடுத்த நடவடிக்கை என்ன? - பிபிசி பகுப்பாய்வு
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 27) இரானின் வான் பாதுகாப்பு அமைப்பை முடக்கியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இரானின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்.
இந்தத் தாக்குதல் இரானின் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அதன் ஏவுகணை தயாரிக்கும் திறனுக்கு மோசமான சேதம் விளைவித்ததாக இரான் தெரிவித்தது.
இந்தத் தாக்குதல் குறித்து இரானின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் பொதுவெளியில் குறைவாகவே தெரிவித்தன. பல ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும், அவ்வாறு இடைமறிக்கப்படாத ஏவுகணைகளும் வான் பாதுகாப்பு அமைப்புக்கு சிறிய அளவிலான சேதங்களையே உண்டாக்கியதாகவும் இரான் அதிகாரிகள் தெரிவித்தனர்
இந்நிலையில், தாக்குதல் குறித்து முதன்முறையாகப் பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ள இரான் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, இரான் மக்களின் வலிமை மற்றும் விருப்பத்தை இஸ்ரேலுக்கு எவ்வாறு தெரிவிப்பது என்பதையும், இந்த நாட்டின் நலன்களுக்கு உகந்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் என்று தெரிவித்தார்.
இரானின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? இஸ்ரேல் என்ன மாதிரியான எதிர்வினையாற்றும்?
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)