BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம். கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.
நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் இந்த வாரம், 'சீனாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: இந்தியர்கள் அச்சம் கொள்ள தேவையா?, 2022-இல் திமுகவை சோதித்த 'தலைவலி' தருணங்கள், உலகை உலுக்கிய மனதில் நின்ற படங்கள், ஐபிஎல் ஏலம் 2023: தோனிக்கு தோள் கொடுப்பாரா பென் ஸ்டோக்ஸ்?, விஜய் VS அஜித்: ஒன்றாக களமிறங்கிய தருணங்களில் வெற்றி யாருக்கு ' என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
சீனாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: இந்தியர்கள் அச்சம் கொள்ள தேவையா?
சீனாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் தரவுப்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் 28, 493 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜனவரி 8ம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை கொண்டுவரப் போவதாகவும், தனது வான் எல்லையை திறக்கப்போவதாகவும் சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பால் பிற நாடுகள் கவலையடைந்துள்ளன. விரிவாக படிக்க லிங்கை க்ளிக் செய்யவும்.
2022-இல் திமுகவை சோதித்த 'தலைவலி' தருணங்கள்
கடந்து செல்லும் இந்த 2022ஆம் ஆண்டில் தி.மு.க. சில சாதனைகளைச் செய்திருந்தாலும் பல சோதனைகளையும் சறுக்கல்களையும் சந்தித்திருக்கிறது. ஆளும் கட்சியான தி.மு.கவிற்கு இந்த ஆண்டு எப்படி அமைந்தது? லிங்கை க்ளிக் செய்து முழுமையாக வாசியுங்கள்.
2022க்கு பிரியாவிடை: உலகை உலுக்கிய மனதில் நின்ற படங்கள்

பட மூலாதாரம், Getty Images
2022ஆம் ஆண்டு முடிவுக்கு வரவுள்ளது. இந்தாண்டு உலகையே உலுக்கிய 14 புகைப்படங்களை கெல்லி குரோவியர் தேர்ந்தெடுத்து இங்கே வழங்கியுள்ளார்.
பெட்ரோல் குண்டுகளை வைத்து யுக்ரேன் படையினர் சதுரங்கம் விளையாடுவது, ஹிஜாப் சட்டங்களுக்கு எதிரான இரான் பெண்களின் போராட்டம், ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ உட்பட பல முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. விரிவாக பார்க்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
ஐபிஎல் ஏலம் 2023: தோனிக்கு தோள் கொடுப்பாரா பென் ஸ்டோக்ஸ்? கோப்பையை வெல்லுமா சிஎஸ்கே?
“சென்னை சூப்பர் கிங்ஸில் இணைந்திருப்பதால் பென் ஸ்டோக்ஸ் மகிழ்ச்சியுடன் இருப்பார். காரணம், ஒவ்வொரு வீரரும் எம்.எஸ்.தோனியின் தலைமையில் விளையாட விரும்புவார்கள். அவரை பலரும் நேசிக்கிறார்கள்” - இவை ஐபிஎல் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் உதிர்த்த வார்த்தைகள்.
பென் ஸ்டோக்ஸை சென்னை அணி ஏலத்தில் எடுத்த அடுத்த கணமே, ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடத் துவங்கி விட்டனர். தோனி - பென் ஸ்டோக்ஸ் காம்போவில் இந்த முறை கோப்பை சென்னைக்குத்தான் என பலரும் உற்சாகத்தில் உள்ளனர். விரிவாக வாசிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

விஜய் VS அஜித்: ஒன்றாக களமிறங்கிய தருணங்களில் வெற்றி யாருக்கு?
விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் அஜித் நடிக்கும் துணிவு படமும் பொங்கல் தினத்தை ஒட்டி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியிருப்பதால் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
இதற்கு முன்பாக எத்தனை முறை இந்த மோதல் நடந்திருக்கிறது? விரிவாக படிக்க லிங்கை க்ளிக் செய்யவும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



























