அமெரிக்காவில் காவல் அதிகாரி மீது சாண்ட்விச் வீச்சு

அமெரிக்காவில் காவல் அதிகாரி மீது சாண்ட்விச் வீச்சு
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் பணியில் இருந்த federal agent மீது ஒருவர் சாண்ட்விச்சை வீசினார். இதையடுத்து, அமெரிக்க நீதித்துறை ஊழியரான இந்த நபர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இவர் மீது கடுமையான தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குற்றங்களை ஒடுக்குவதற்கான டிரம்பின் சபதத்தின் ஒரு பகுதியாக federal agents மற்றும் National Guard படைகள் குவிக்கப்படுகின்றன. குற்றங்களை எதிர்த்துப் போராடவும், போதைக்கு அடிமையானவர்களையும் வீடற்ற மக்களையும் அகற்ற இந்தப் படைப் பிரிவு அவசியம் என அவர் கூறுகிறார். ஆனால், இந்த படைகளுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

சட்டம் ஒழுங்கில் மாகாணங்களின் கட்டுப்பாட்டை இந்த படையினர் மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு