சென்னைக்கு அருகில் இப்படி ஒரு அருவியா? 365 நாளும் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
சென்னையிலிருந்து 90 கிமீ தொலைவிலும், திருப்பதியிலிருந்து 46 கிமீ தொலைவிலும் கைலாச கோணா அருவி அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் என்பது இந்த அருவியின் சிறப்பாகும்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாராயணவனம் அருகே கைலாசகோணாவில் ஒரு குகைக் கோயில் உள்ளது. இந்த அருவி கைலாசநாதர் கோயிலுக்கு அருகில் உள்ளது. வாகனங்களில் இந்த இடத்திற்கு வந்த பிறகு கைலாச கோணா அருவியை அடைய அரை கிலோமீட்டருக்கு படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். கைலாசகோணா அருவிக்கு அருகில் இரண்டு சிறிய அருவிகள் உள்ளன.
அவ்விடங்களுக்குச் செல்ல சரியான வழி இல்லை. சமூக விரோத செயல்களின் மையமாக மாறிவிட்டதாக கருதி அந்த அருவிகளுக்கு சுற்றுலா பயணிகளை போலீசார் அனுமதிப்பதில்லை. பிரதான நீர்வீழ்ச்சியில் குரங்குகள் பெரும் பிரச்சனையாக உள்ளது.
கைலாசகோணா நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தும் விருந்தினர் இல்லமும் சில தனியார் இல்லங்களும் உள்ளன. அருவிக்கு செல்லும் வழியில் சில ஹோட்டல்களும் உள்ளன. ராயலசீமா உணவுகளை ருசிக்க விரும்புபவர்கள் அருவிக்குச் செல்லும் வழியில் ஆர்டர் செய்யலாம், அவர்கள் திரும்பி வருவதற்குள் அவை தயாராகி, வந்ததும் பரிமாறப்படும்.
செய்தியாளர்: துளசி பிரசாத் ரெட்டி
ஒளிப்பதிவு: சுதா போலா
படத்தொகுப்பு: சங்கீதம் பிரபாகர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



