You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலை செய்கிறது' - ஐநா ஆணையம்
இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலை செய்வதாக ஐநா ஆணையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய ஐ.நா விசாரணைக் குழு தலைவர் நவ்பி பில்லே, "காஸாவில் பாலத்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது, அதை தொடர்ந்து செய்து வருகிறது என்ற முடிவுக்கு ஆணையம் வந்துள்ளது.
அக்டோபர், 2023 காஸா பகுதியில் தனது ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது. இப்போது 2 ஆண்டுகளாகிறது.
1948-ஆம் ஆண்டுக்குப் பிறகு பாலத்தீன மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகவும் இரக்கமற்ற தாக்குதலாக இது உள்ளது.
பாலத்தீன மக்கள் கொல்லப்படுவதும், அவர்கள் பசியில் மரணமடைவதும் ஒவ்வொரு நாளும் தொடர்கின்றன." என தெரிவித்தார்.
இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு