காணொளி: அமெரிக்கா நடத்திய தாக்குதல் - வெனிசுவேலா கூறுவது என்ன?

காணொளி: அமெரிக்கா நடத்திய தாக்குதல் - வெனிசுவேலா கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

சனிக்கிழமையான இன்று வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடித்து வெனிசுவேலாவுக்கு வெளியே கொண்டு சென்றுள்ளதாக டிரம்ப் கூறுகிறார்.

வெனிசுவேலா தலைநகரான கராகஸில் இன்று தாக்குதல் நடந்தது. ராணுவத் தளங்கள் உட்பட கராகஸில் பல இடங்களில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் இந்தத் தாக்குதலை அமெரிக்கா நிகழ்த்தியதாக டிரம்ப் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், வெனிசுவேலா மற்றும் அதன் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறை பிடிக்கப்பட்டு, நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவின் டெல்டா ஃபோர்ஸ் படைகளால் மதுரோ பிடிக்கப்பட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் ஊடகம் கூறுகிறது. டெல்டா ஃபோர்ஸ் என்பது அமெரிக்க ராணுவத்தின் உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு.

மதுரோ பிடிக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த வெனிசுவேலா துனை அதிபர், அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி எங்கு இருக்கிறார்கள் என்பது அரசாங்கத்துக்கு தெரியாது என கூறினார். மேலும், அவர்கள் இருவரும் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை அரசாங்கம் கோரி உள்ளதாகவும் தெரிவித்தார்.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு