You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லியோ பட இசை வெளியீட்டு விழா ரத்து - என்ன காரணம்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேலைகள் நடந்துவந்தன.
இந்த நிலையில்தான், அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லியோ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், "விழா அனுமதிச் சீட்டு கோரி ஏகப்பட்ட கோரிக்கைகள் வருவதாலும் பாதுகாப்புக் காரணங்களாலும் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிலர் இதன் பின்னணியில் திமுக அரசு இருப்பதாகக் கூறி #DMKFearsThalapathyVIJAY என்ற ஹாஷ்டாகின் கீழ் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை விவரிக்கிறது இந்தக் காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்