You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"புதுசா சொல்லுங்கன்னா என்ன சொல்றது?" - தவெக தலைவர் விஜய் பேசியது என்ன?
"புதுசா சொல்லுங்கன்னா என்ன சொல்றது?" - தவெக தலைவர் விஜய் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 27) பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "வரும் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பது போன்றது" என்றார்.
அதிமுக - பாஜக கூட்டணியை விமர்சித்த விஜய், "அக்கூட்டணி மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அதேநேரம், திமுக குடும்பம் பாஜக-வுடன் மறைமுக உறவுக்காரராக இருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். அடுத்த தேர்தலில் நீங்கள் திமுக-விற்கு வாக்களித்தால், அது பாஜக-விற்கு போடும் வாக்குதான். ஆகவே யோசித்து ஜாக்கிரதையாக செயல்படுங்கள்" என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு