காணொளி: துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்து நகைக்கடையில் கொள்ளை
காணொளி: துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்து நகைக்கடையில் கொள்ளை
பிரசுரிக்கப்பட்டது
பஞ்சாப் மாநிலம் ஜலந்தில் உள்ள பார்கவ் கேம்ப் பகுதியில் பட்டப்பகலில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தின் காட்சி இது.
முகமுடி அணிந்த மூன்று நபர்கள் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நகைக்கடைக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டனர்.
காலை 10.50 மணியளவில் இந்த கொள்ளை நிகழ்ந்துள்ளது. கொள்ளையர்கள் நகைகளையும் பணத்தையும் பறித்து சென்றதாக கடை உரிமையாளர் கூறுகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



