100 நாடுகளில் இருந்து 2,000 பொம்மைகள் - லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அருங்காட்சியகம்

100 நாடுகளில் இருந்து 2,000 பொம்மைகள் - லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அருங்காட்சியகம்
பிரசுரிக்கப்பட்டது

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் அமைந்துள்ள பொம்மைகளின் அருங்காட்சியகத்தில் 108 நாடுகளைச் சேர்ந்த 2,000 பொம்மைகள் உள்ளன.

“நாங்கள் அருங்காட்சியகத்திற்காக ஒரு பொம்மையை கூட விலைகொடுத்து வாங்கியதில்லை. அனைத்தும் பரிசாக வந்தவை. உலகின் பல பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு பொம்மைகளை வழங்கியுள்ளனர்” என்கிறார் அருங்காட்சியகத்தின் தலைவர் மீனாக்ஷி அகர்வால்.

தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் ரோட்டரி அமைப்பில் உள்ளோம். ஒரு பொம்மை அருங்காட்சியகம் வைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தவுடன் என் கணவர் தீபக் ரோட்டரி உறுப்பினர்களுக்கு இந்த யோசனையை பரிந்துரைத்தார்.

அதன் பிறகு அவர் உலகம் முழுவதும் உள்ள ரோட்டரி பிரிவுகளுக்கு கடிதம் எழுதி, ரோட்டரி உதவியுடன் ஒரு அருங்காட்சியகம் அமைக்கும் யோசனையைத் தெரிவித்தார். உலகின் பல பகுதிகளில் இருந்து பொம்மைகளை அனுப்பி வைக்கவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்” என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து, உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் பொம்மைகளை மீனாக்ஷி அகர்வாவாலின் குடும்பத்திற்கு அனுப்பியுள்ளனர்.

“அவர்களின் கலாச்சாரப் பெருமையை இந்த பொம்மைகள் இந்தியர்களுக்கு கற்பிக்கும் என்ற நம்பிக்கையில் அனுப்பி வைத்தார்கள்.” என்கிறார் மீனாக்ஷி அகர்வாலின் மகள் காஜல் அகர்வால்.

“எந்த மன்னரோ அல்லது அரசோ இதற்கு பங்களிக்கவில்லை. சாதாரண மக்களின் முயற்சியால் ஒரு பொம்மை அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது இதுவே முதல் முறை, அதனால் தான் இதற்கு ‘லிம்கா விருது’ கிடைத்தது” என்று கூறுகிறார் மீனாக்ஷி அகர்வால்.

மேலும் விவரம் காணொளியில்.

தயாரிப்பு: தேஜஸ் வைத்யா/பிபின் தங்கரியா

படத்தொகுப்பு: பவன் ஜெய்ஸ்வால்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)