You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆதிபுருஷ் திரைப்பட சர்ச்சை: நேபாள தலைநகரில் திரையிட தடைவிதிக்கப்பட்டது ஏன்?
இந்தியாவின் இதிகாசக் கதைகளில் ஒன்றான ராமாயணத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘ஆதி புருஷ்.
தென்னிந்தியாவின் முக்கிய நட்சத்திரமாகக் கருதப்படும் பிரபாஸ், பாலிவுட் நடிகர்கள் சைஃப் அலிகான், கீர்த்தி சனோன், சன்னி சிங், தேவ்தத்தா நாகே உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார்.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு, சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். மேலும் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிற்து.
பெரும் எதிர்பார்ப்புகளோடு இப்படம் வெளியிடப்பட்டது. ஆனால் படத்தின் தயாரிப்பு, கிராபிக்ஸ் காட்சிகள், வசனம் எனப் பலவும் கடும் விமர்சனங்களில் சிக்கியுள்ளன.
குறிப்பாக ‘இந்திய தாயின் மகள் சீதை’ என்ற வசனத்திற்கு இந்தியாவின் அண்டை நாடான நேபாளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்