You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகில் பல முக்கிய மாற்றங்களுக்குக் காரணமான காபி பிறந்த கதை தெரியுமா? - காணொளி
கடந்த 1500 ஆண்டுகளாக உலகம் முழுவதும் காஃபி பருகப்பட்டு வருகிறது.
காஃபியில் இருக்கும் முக்கியமான மூலப்பொருள் கஃபீன். புவியில் பரவலாக நுகரப்படும் மனோவியல் மருந்தாக (psychoactive drug) கஃபீன் சொல்லப்படுகிறது.
எத்தியோப்பியாவில் தோன்றிய *காஃபியா* அராபிகா எனும் செடியின் பழத்திலிருந்துதான் காஃபி கிடைக்கிறது.
கஃபீன் நமது செரிமான அமைப்பில் நுழையும் போது, அது குடல் வழியாக ரத்த ஓட்டத்தில் கலக்கிறது.
பின் நரம்பு மண்டலத்தைத் அடையும் போதுதான் அதன் வேலையே தொடங்குகிறது.
கஃபீன் உங்களின் மனநிலையில் நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தலாம். சோர்வு உணர்வுகளைத் தடுத்து, உடல் செயல்திறனை மேம்படுத்த உதவக்கூடும். எனவே, பல விளையாட்டு வீரர்கள் அதனை ஒரு சப்ளிமெண்டாக பயன்படுத்துகின்றனர்.
இதன் தாக்கம் 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை நீடிக்கும். கஃபீனை உட்கொண்ட 5 முதல் 10 மணி நேரத்திற்குப் பிறகு உடல் அதை நீக்குகிறது. ஆனாலும் கஃபீனின் பிற விளைவுகள் உடலைவிட்டு நீங்க நீண்ட நேரம் பிடிக்கும்.
மேலும் விவரங்களை காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)