காணொளி: காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பு - பணையக்கைதிகள் விடுவிப்பு எப்போது?

காணொளி: காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பு - பணையக்கைதிகள் விடுவிப்பு எப்போது?
பிரசுரிக்கப்பட்டது

காஸா போர் நிறுத்த திட்டத்துக்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

காஸாவில் இரண்டு ஆண்டுகளாக தொடரும் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

இந்த முதற்கட்ட போர் நிறுத்தம் மூலம் பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் எனவும், இஸ்ரேல் தங்கள் துருப்புக்களை ஒப்புக்கொண்ட எல்லை வரை திரும்பப் பெறும் என்றும் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட போர் நிறுத்தம் பற்றிய செய்திகள் வெளியானதையடுத்து இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவில் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடினர்.

காஸாவில் ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளில் ஒருவரான ஓம்ரி மீரானின் தந்தை டேனி மீரான் மகிழ்ச்சியால் தான் ஆனந்தக் கண்ணீர் வடித்ததாகக் கூறுகிறார்.

அடுத்து என்ன நடக்கும்? முழு விவரம் காணொளியில்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு