காணொளி: சொந்த வீடு - வாடகை வீடு இரண்டில் சரியான தேர்வு எது?

காணொளிக் குறிப்பு, வீடு வாங்குவது நல்லதா?
காணொளி: சொந்த வீடு - வாடகை வீடு இரண்டில் சரியான தேர்வு எது?
பிரசுரிக்கப்பட்டது

சொந்த வீடு வாங்குவது என்பது பலரின் வாழ்நாள் சாதனையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக இந்த எண்ணத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, 25 முதல் 35 வயதுக்கு இடையிலான இளம் தலைமுறையினரின் கண்ணோட்டத்தில், சொந்த வீடு தொடர்பான சிந்தனைகள் மாறியுள்ளன.

சொந்த வீடு வாங்குவது உண்மையிலே லாபகரமானதா அல்லது வாடகை வீட்டில் வசிப்பதே புத்திசாலித்தனமான முடிவா என்று விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். இரண்டில் எது சரியான முடிவு?

சொந்த வீடு என்பது சமூக அந்தஸ்தின் அடையாளமாவும், நிதி பாதுகாப்பாக்கிற்கான அம்சமாகவும் பார்க்கப்படுகிறது.

சொந்தமாக வீடு வாங்கிவிட்டால், வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாம், வாடகை கொடுத்து பணத்தை வீணடிக்காம சொந்தமா வீடு வாங்கவேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை அடிக்கடி நாம் அனைவரும் கேள்விபட்டிருப்போம்.

நகரங்களில் ராக்கெட் வேகத்தில் வீடுகளின் விலை உயர்ந்துவரும் அதே நேரத்தில் வீட்டு வாடகையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நகரங்களை நோக்கி மக்கள் அதிக அளவில் இடம்பெயர்வது உலக அளவில் அதிகரித்திருந்தாலும், மக்களின் வருமானம் அந்த அலவிற்கு அதிகரிக்கவில்லை.

சொந்த வீடு இருப்பது என்பது உளவியல் மற்றும் உணர்ச்சிபூர்வமாக திருப்தியளிக்கக் கூடியது. இருப்பினும், சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை வீட்டுக்கடனுக்கான மாதாந்திர தவணையாக கொடுக்க வேண்டும் என்பது, நீண்ட காலத்திற்கு நிதிச்சுமையை உருவாக்குகிறது.

எனவே, சொந்த வீடு வாங்குவது சரியான முடிவா, இல்லை வாடகை வீட்டில் இருப்பது நிதிச்சுமை இல்லாமல் வாழ்வதற்கான சிறந்தத் தெரிவா? என்பதை இந்தக் காணொளியில் பார்ப்போம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு