காணொளி: தீப்பற்றி எரிந்த தனியார் ஆம்னி பேருந்து

காணொளிக் குறிப்பு, சோழவரம் அருகே தனியார் ஆம்னி பேருந்து இன்று காலை தீப்பற்றி எரிந்தது.
காணொளி: தீப்பற்றி எரிந்த தனியார் ஆம்னி பேருந்து
பிரசுரிக்கப்பட்டது

சோழவரம் அருகே தனியார் ஆம்னி பேருந்து இன்று காலை தீப்பற்றி எரிந்தது.

ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு புறப்பட்ட அந்த பேருந்து, சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் காரனோடை பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்தது.

பேருந்தில் இருந்து புகை வருவதைக் கண்ட அதன் ஓட்டுநர், உடனடியாக சாலையோரம் பேருந்தை நிறுத்தி அதிலிருந்த 32 பயணிகளையும் கீழே இறக்கிவிட்டதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு