பருவமெய்திய சிறுமி வகுப்பு வாசலில் அமர்ந்து தேர்வு எழுதிய விவகாரம் – கோவையில் சர்ச்சை

பருவமெய்திய சிறுமி வகுப்பு வாசலில் அமர்ந்து தேர்வு எழுதிய விவகாரம் – கோவையில் சர்ச்சை
பிரசுரிக்கப்பட்டது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள தனியார் பள்ளியில் முதல் மாதவிடாயைத் தொடர்ந்து தேர்வு எழுத சென்ற எட்டாம் வகுப்பு மாணவியை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டியலினத்தைச் சேர்ந்த குழந்தை என்பதால், இப்படி அவமதிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

பெற்றோர் விடுத்த வேண்டுகோளின்படியே, தனியாக உட்கார வைத்து தேர்வெழுத வைத்ததாகக் கூறிய பள்ளி நிர்வாகம், பள்ளி முதல்வரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஆனால், ''தனி வகுப்பறையில் உட்கார வைக்காமல், வகுப்பறைக்கு வெளியே உட்கார வைத்தது ஏன்'' என்று விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? முழு விபரம் இந்த வீடியோவில்!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு