குஜராத் தீ விபத்து: தகரத்தை உடைத்து, வெளியே குதித்து உயிர் தப்பிய இளைஞர் கூறுவது என்ன?

குஜராத் தீ விபத்து: தகரத்தை உடைத்து, வெளியே குதித்து உயிர் தப்பிய இளைஞர் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள டிஆர்பி வணிக வளாகத்தில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வணிக வளாகத்தில் குழந்தைகள், பெரியவர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்ட பகுதியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவியதால், சில நிமிடங்களில் விளையாட்டு மையம் மொத்தமும் எரிந்தது. தீ விபத்தில் உடல்கள் மோசமாகக் கருகியதால், இறந்தவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் காரணமாக, ராஜ்கோட்டின் உள்ளூர் அரசு அதிகாரிகள், விளையாட்டு மையத்தின் உரிமையாளர்கள், மற்றும் குஜராத் அரசு மீதும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்த விவகாரத்தில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்தப் பயங்கரமான தீ விபத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. தீ விபத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை குஜராத் அரசு அமைத்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட டிஆர்பி வணிக வளாகத்தின் விளையாட்டு மையம், சிமென்ட் கொண்டு அமைக்கப்பட்ட கான்கிரீட் கட்டமைப்பு அல்ல என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)