You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் புற்றுநோய்க்கான மருந்து தட்டுப்பாடு: பள்ளி மாணவியை பலி வாங்கிய பொருளாதார நெருக்கடி
இலங்கையில் புற்றுநோய்க்கான மருந்து தட்டுப்பாடு: பள்ளி மாணவியை பலி வாங்கிய பொருளாதார நெருக்கடி
பிரசுரிக்கப்பட்டது
இலங்கையில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால் இன்றும் மக்கள் பல்வேறு விதமான துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
நாட்டிலுள்ள நோயாளிகள் பெரும்பாலும் இவ்வாறான நெருக்கடிகளைச் சந்தித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் ஓரளவு முன்னேற்றம் அடைந்திருந்தாலும், பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இன்றும் மக்களைப் பாதித்து வருகின்றது.
இலங்கையில் தற்போதுள்ள மருந்து தட்டுப்பாடு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் டில்ஷா டில்ரூக்ஷியையும் நேரடியாகவே பாதித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்