You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: புதின், ஷி ஜின்பிங்கை மோதி சந்தித்தது குறித்து விமர்சித்த டிரம்ப் ஆலோசகர்
"இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகின்றனர்" என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தற்போது இந்தியா குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமரின் சீனப்பயணம் பற்றி பேசிய அவர், உலகின் மிகப்பெரிய சர்வதிகாரிகளுடன் மோதி நெருக்கம் காட்டுவது அவமானகரமானது எனக் கூறினார்.
"இது மிகவும் அவமானகரமான விஷயம். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவராகிய நரேந்திர மோதி, உலகின் மிகப்பெரிய சர்வாதிகாரிகளான விளாடிமிர் புதின், ஷி ஜின்பிங்குடன் நெருக்கம் காட்டுவது அவமானகரமானது. குறிப்பாக, இந்தியா பல தசாப்தங்களாக சீனாவுடன் பனிப்போரிலும், சில நேரங்களில் ஆயுதப் போரிலும் ஈடுபட்டுள்ளது, அவர் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை" என்று பேசியுள்ளார்.
மேலும், இந்தியா 'வரிகளின் மகாராஜா' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பீட்டர் நவரோ ஏன் இப்படி பேசினார், இதற்கான பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு