You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா - சீனா உடன்பாட்டால் இந்தியாவின் கனவு நனவாவதில் சிக்கலா?
உலகின் உற்பத்தி மையமாக உருவெடுப்பதற்கான நீண்ட கால லட்சியத்தை நோக்கி இந்தியா முன்னேற இப்போதுதான் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சீனாவும் அமெரிக்காவும் பரஸ்பரம் வரிகளை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது, உலகின் உற்பத்தி மையமாக உள்ள சீனாவின் இடத்தை அடைவதற்கான இந்தியாவின் நோக்கத்தை சீர்குலைக்கலாம் என கருதப்படுகிறது.
சீனா மீது டிரம்ப் விதித்த இறக்குமதி வரி ஒரே இரவில் 145 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இது இந்தியாவுக்கு 27 சதவிகிதமாக உள்ளது. சுவிட்சர்லாந்தில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
அதன் விளைவாக, சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயரும் உற்பத்தி முதலீடுகள் ஒன்று "அப்படியே நின்றுவிடும்" அல்லது "(சீனாவுக்கே) திருப்பி அனுப்பப்படும்" என, டெல்லியை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிந்தனை மையமான குளோபல் டிரேட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் (ஜிடிஆர்ஐ) அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
"குறைவான செலவுடைய அசெம்பிள்கள் (assembly lines - ஒரு பொருளின் பாகங்களை ஒன்றாக இணைக்கும் செயல்முறை) தப்பிக்கலாம், ஆனால் மதிப்பு கூட்டு தயாரிப்புகளின் வளர்ச்சி ஆபத்தில் உள்ளது."
அமெரிக்க சந்தைக்கான பெரும்பாலான ஐஃபோன் உற்பத்தியை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றுவதாக ஆப்பிள் நிறுவனம் சமிக்ஞைகளை வெளிப்படுத்திய நிலையில், கடந்த மாதம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருந்த உற்சாகத்துக்கு எதிரான மனநிலையே தற்போது உள்ளது.
இந்த ஒப்பந்தத்தினால் இந்தியாவுக்கான விளைவுகள் என்னவாக இருக்கும் என விரிவாக விளக்குகிறது இந்த காணொளி.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு