'போரில் ஈடுபட்டால், டிரம்ப் இப்படியாகத்தான் நினைவு கூறப்படுவார்' - இரான் அமைச்சர்

'போரில் ஈடுபட்டால், டிரம்ப் இப்படியாகத்தான் நினைவு கூறப்படுவார்' - இரான் அமைச்சர்
பிரசுரிக்கப்பட்டது

இரான் - இஸ்ரேல் இடையே மோதல் தீவிரம் அடைந்து வருகின்ற சூழலில் அமெரிக்கா இந்த போரில் பங்கேற்றால், அதற்கு தொடர்பு இல்லாத போரில் பங்கேற்றதாக அதிபர் டிரம்ப் நினைவுக் கூறப்படுவார் என்று இரானின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

''தாக்குதல் நிற்கும் தருணத்தில், பேச்சுவார்த்தை தான் முதல் தேர்வாக இருக்கும். ஆனால், அமெரிக்காவிடமிருந்து வரும் செய்திகளைப் பார்க்கும்போது, அவர்கள் இந்த போரில் ஈடுபட விரும்புகிறார்கள் எனத் தெரிய வருகிறது. இது அமெரிக்காவின் போர் இல்லை என நாங்கள் நினைக்கிறோம். இந்த போரில் அவர்கள் பங்கேற்றால், அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லாத போரில் பங்கேற்றதாக அதிபர் டிரம்ப் நினைவுக் கூறப்படுவார். நிலைமை மேலும் சிக்கலுக்குள்ளாகும். முழு பிராந்தியமும் நரகமாகிவிடும்'' என்றும் அவர் பேசியுள்ளார்.

முழு விவரம் இந்த வீடியோவில்!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு