காணொளி: சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்த தருணம்

காணொளிக் குறிப்பு, சீனாவில் புதிய பாலம் பாதியளவு இடிந்த தருணம்
காணொளி: சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்த தருணம்
பிரசுரிக்கப்பட்டது

சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் புதிதாக திறக்கப்பட்ட ஒரு பாலம் பகுதியளவில் இடிந்து விழுந்தது. இதனால் மிகப்பெரிய அளவில் தூசி கிளம்பியது.

பாலத்தின் அருகிலுள்ள சாலைகளில் பிளவுகள் ஏற்பட்டதையடுத்து அதிகாரிகள் திங்கள்கிழமை 758 மீட்டர் நீளமுள்ள ஹாங்ச்சீ (Hong-chee) பாலத்தை மூடியிருந்தனர்.

செவ்வாய்க்கிழமை மதியம் மலைப்பகுதியின் நிலைமை மேலும் மோசமடைந்து, நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இல்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு