You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பரஸ்பர வரிகளுக்கு இடை நிறுத்தம் - அமெரிக்காவின் திடீர் அறிவிப்பால் ஏற்றம் கண்ட ஆசிய பங்குச் சந்தைகள்
பல நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை 90 நாட்கள் இடைநிறுத்தம் செய்வதாக தற்போது தெரிவித்துள்ளார்.
இதனால், தைவான், ஜப்பான், தென் கொரியா உள்பட ஆசிய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை காலை முதல் ஏற்றம் கண்டு வருகின்றன.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை பரஸ்பர வரியை இடைநிறுத்தம் செய்ய டிரம்ப் முடிவு செய்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், அப்போது இதை வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது. இருப்பினும் இந்தச் செய்தியால் குறுகிய காலத்துக்குப் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.
வெள்ளை மாளிகை மறுத்த 90 நாட்கள் பரஸ்பர வரி இடைநிறுத்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த முடிவுக்கு காரணம் என்ன?
முழு விபரம் இந்த வீடியோவில்
இது தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள: டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தியது ஏன்?
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு