வேலூர்: மும்முனைப் போட்டியில் முந்தப் போவது யார்? முஸ்லிம்கள் வாக்கு யாருக்கு?

வேலூர்: மும்முனைப் போட்டியில் முந்தப் போவது யார்? முஸ்லிம்கள் வாக்கு யாருக்கு?
பிரசுரிக்கப்பட்டது

உதயசூரியன், இரட்டை இலை, தாமரை நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சில தொகுதிகளில் ஒன்றாக இருக்கும் வேலூரில் இந்த முறை கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த முறை முதல் இரண்டு இடங்கள் பிடித்த வேட்பாளர்கள் மீண்டும் களத்தில் மோதுகின்றனர். நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகனின் மகனான டி.எம்.கதிர் ஆனந்த் உதய சூரியன் சின்னத்திலும், அவரை எதிர்த்து தாமரை சின்னத்தில் நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகிறார்.

கடந்த முறைச் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த போது, ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டிருந்தார்.

அதிமுகவும் பாஜகவும் இந்த முறை தனித்தனியே போட்டியிடும் நிலையில், ஏ.சி.சண்முகம் பாஜக கூட்டணியில் இணைந்து அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த மும்முனைப் போட்டியில் அதிமுக தனது வேட்பாளராக புதுமுகமான அரசு மருத்துவர் பசுபதியை நிறுத்தி களம் காண்கிறது. தொகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் வாக்குகளை பெறுவதில் கவனமாக உள்ளது.

வேலூர் தொகுதி இது வரை திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் வசம் இருந்துள்ளது. வேலூர், கே.வி.குப்பம், அணைக்கட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம் என ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்ட வேலூரில் கணிசமான எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.

மேலும் விவரம் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)