செய்தியாளரை பேசவிடாமல் வம்பிழுத்துக் கொண்டே இருந்த குட்டி யானை
பிரசுரிக்கப்பட்டது
யானைகளும் மனிதர்களைப் போல குறும்புத்தனம் செய்யக்கூடியவை என்பது இந்த வீடியோவை பார்த்தால் புரியும்.
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள குட்டி யானைகள் பராமரிப்பு முகாமிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற கென்யா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (கென்ய ஒளிபரப்புக் கழகம்) செய்தியாளர் ஆல்வின் கௌண்டா, அங்கிருந்து செய்தி வழங்கிக் கொண்டிருந்தார்.
வறட்சியின்போது குட்டி யானைகள் பராமரிக்கப்படும் விதம் குறித்துப் பேசிக் கொண்டிருந்த செய்தியாளருக்கு அருகே ஒரு குட்டி யானை நின்று கொண்டிருந்தது. அவர் பேசும்போது அந்த குட்டி யானை பேசவிடாமல் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது.
“பேசியது போதும் வா விளையாடலாம்” என்பதைப் போல அந்தக் குட்டி யானை அவரை வம்பிழுக்கும் காட்சி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
















