You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிணைக் கைதிகளை ஹமாஸ் எப்படி நடத்தியது? மீண்டு வந்த இஸ்ரேலிய பெண் பேட்டி
ஹமாஸிடம் இரண்டு வாரங்கள் சிக்கியிருந்த அனுபவத்தை 85 வயதான யோஷேவேத் லைஃப்ஷிட்ஸ் என்ற இஸ்ரேல் பெண்மணி ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.
லைஃப்ஷிட்ஸ் மற்றும் 24 பணயக்கைதிகள் சுரங்கப் பாதைகளுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பணயக் கைதிகள் சுத்தமான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு உறங்குவதற்கு மெத்தைகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
"இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை அவரைக் கண்காணிக்க ஒரு மருத்துவர் வருவார். காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்ட போது காயமடைந்த பணயக்கைதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒவ்வொரு ஐந்து பணயக் கைதிகளையும் கண்காணிக்க ஒரு காவலர் இருக்கிறார்" என்று அவர் கூறினார்.
சுரங்கப்பாதையில் தங்கியிருந்தபோது, அவருக்கும் அவரது குழுவினருக்கும் வெள்ளைப் பாலாடைக்கட்டி மற்றும் வெள்ளரிகள் உணவாக வழங்கப்பட்டதாக லைஃப்ஷிட்ஸ் கூறினார். அதே உணவையே ஹமாஸ் போராளிகளும் சாப்பிட்டனர்" என்று அவர் கூறினார்.
டெல் அவிவில் உள்ள மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் நரக வேதனையை அனுபவித்ததாகக் கூறினார்.
முழு விவரங்களை காணொளியில் பார்க்கலாம்.
ஹமாஸ் இயக்கத்தினர் தாங்கள் கடத்தி சென்றவர்களில் தாய்-மகள் இரண்டு பேரை அக்டோபர் 20ம் தேதி விடுவித்தது. மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுவிப்பதாக ஹமாஸ் கூறியது. அதன் தொடர்ச்சியாக, இன்று 2 வயது முதிர்ந்த பெண்களை ஹமாஸ் விடுவித்துள்ளது. அவர்கள் 79 வயதான நூரித் கூப்பர், 85 வயதான யோஷேவேத் லைஃப்ஷிட்ஸ் ஆகியோர் ஆவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)