You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய விமானப் படை வாகனங்கள் மீது திடீர் தாக்குதல் - ஒரு வீரர் பலி, 4 பேர் காயம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய விமானப்படை வாகன தொகுதி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
சனிக்கிழமை மே 4-ம் தேதி மாலை 6:15 மணியளவில், வீரர்கள் ஜரன்வாலியில் இருந்து விமானப்படை நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என பிடிஐ செய்தி முகமை கூறியுள்ளது.
இந்த தாக்குதலை சனிக்கிழமை இரவு சுமார் எட்டே முக்கால் மணிக்கு இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியது.
சுமார் ஒரு மணிநேரம் கழித்து இந்திய விமானப்படை வெளியிட்ட மற்றொரு பதிவில், "பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில், விமானப்படை வீரர்கள் துணிச்சலாகப் போராடினர்" என்று கூறியது. "இந்தத் தாக்குதலில், இந்திய வான் படை வீரர்கள் 5 பேர் சுடப்பட்டனர், அவர்கள் உடனடியாக அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் பலத்த காயமடைந்த வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை முதல், பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளதாகவும், பாதுகாப்புப் படையினர் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருவதாகவும் ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
பூன்ச் தாக்குதலில் விக்கி பஹாடே எனும் வீரர் உயிரிழந்ததை விமானப்படை உறுதிப்படுத்தியது.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)